கொரோனா தொற்று காரணமாக விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்திய பின்னர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் விளையாடிய முதல் அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணி ஒன்றாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சவுத்தாம்ப்டனில் இங்கிலாந்துக்கு (England) எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவ்வணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் மற்றும் மூன்றாவது டெஸ்டை 2–1 என்ற கணக்கில் வென்றது.
இந்நிலையில் சென்ற மாதம் பிரிட்டனுக்கு வந்து இரண்டு வாரங்களாக பிரிந்து இருந்த கரீபியன் கிரிக்கெட் வீரர்கள், மேற்கிந்தியத் தீவுகளை அடைந்த பின் டி20 வடிவத்திற்கு ஏற்றது போல் தங்களை மாற்றி கொள்ள பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இங்கிலாந்திற்கு எதிரான தொடரைப் போன்றே, 6 அணிகள் கொண்ட சிபிஎல் தொடர் காலியான அரங்கங்களில் பாதுகாப்பான சூழலில் இந்தப் போட்டிகள் நடத்தப்படும் எனவும், இப்போட்டிகள் நடத்தப்படும் இடத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான விதிகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.