Categories
கிரிக்கெட் பல்சுவை விளையாட்டு

“CPL-2020” 6 அணிகள்…. 33 போட்டிகள்…. கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம விருந்து….!!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இந்த வருடத்திற்கான கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்கான போட்டி பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

இந்த வருடத்திற்கான டி20 தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்ற நிலையில், 33 போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும் இந்தத் தொடருக்கான போட்டிகள் தாராபோவில் இருக்கின்ற பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மற்றும் பார்க் ஓவல் ஆகிய இரண்டு மைதானங்களிலும் நடைபெற உள்ளது.

லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் அரையிறுதி போட்டியும் இறுதிப் போட்டியும் நடைபெறும். முதலாவதாக தொடங்கப்படும் போட்டியில் சென்ற வருடம் இரண்டாவது இடத்தை பிடித்திருந்த கயானா அமேசான் வோரியர்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளும் களமிறங்குகின்றன. கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நடைபெறுகின்ற முதல் டி20 லீக் தொடர் இதுவே ஆகும்.

Categories

Tech |