Categories
உலக செய்திகள்

ஸ்டைலாக, கெத்தாக…. கால்மேல கால் போட்டு…. அதிபரை தெறிக்க விட்ட செய்தியாளர்….!!

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் ட்ரம்ப் திணறிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர் ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் உயிரிழப்புகளின் விகிதம் அதிகமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய அதிபர் ட்ரம்ப் இறப்பு விகிதத்தை பார்க்காதீர்கள் உலக அளவில் இருக்கும் அதிக பாதிப்பை பாருங்கள் என கூறியுள்ளார்.

ஆனால் செய்தியாளர் உலக அளவில் மற்ற நாடுகளை காட்டிலும் அமெரிக்காவில் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என மீண்டும் கேட்டுள்ளார். அதிபர் ட்ரம்ப் அதற்கு பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளார். அரசியல் செய்தியாளரான ஜோனாதன் எந்தவித பயமுமின்றி அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளால் அதிபர் ட்ரம்ப் திணறிப் போனார்.

Categories

Tech |