அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் அரசு வேலை பார்க்க தடைவிதித்து அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அங்கே அமெரிக்காவால் குடிமக்களுக்கு நிகராக, உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்வாதாரம் அளித்து அமெரிக்கா உதவியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த நபர்களும் அமெரிக்காவில் பல நல்ல வேலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதற்கு மூல காரணமாக அமைந்த ஹெச் 1 பி விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை அந்நாட்டு அதிபர் டிரம்ப் அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் ஹெச் 1பி விசா மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் அரசுத் துறைகளில் வெளிநாட்டு நபர்களை பணியமர்த்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அரசுத் துறைகளில் அமெரிக்க மக்கள் அதிக அளவில் பணிபுரிவதற்காகவும் நாட்டின் பாதுகாப்பிற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.