திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீன்வளத்துறையை மீனவர் நலத்துறையாக மாற்றக் கோரியும் அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள அனைத்து மீனவர்களுக்கும் தாமதமின்றி உடனே கிடைக்க வலியுறுத்தியும், நலத்திட்ட உதவிகளை பெற முடியாத ஆயிரக்கணக்கான மீனவ மக்களை அரசிற்கு எதிராக திசை திருப்பிய மீன்வளத்துறை இயக்குனர் சாமிரன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இது தமிழ்நாடு மீனவர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, தமிழ்நாடு மீனவர் சங்கம் , திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய மீனவ சங்கங்கள் பங்கேற்றனர்.