Categories
மாநில செய்திகள்

ரூ.93 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருட்டு …!!

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு 93,000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை அருகே தரகம்பாடி தாலுகா பொறையார் காவல் சரகத்தில் உள்ள அக்கூரை அடுத்த அப்பராஜ புதூர் என்ற கிராமத்தில் இந்த மதுக்கடை உள்ளது. இந்த கடையின் கண்காணிப்பாளராக விழந்திட சமுத்திரத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று முன்தினம் அசோக்குமார் கடையை மூடி சென்றுள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த அசோக்குமார் பக்கவாட்டு சுவர் துளையிடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தரர்.

அவர் கடையை திறந்து பார்த்தபோது துளையிட்ட சுவர் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 93 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது. அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |