இந்து கடவுள்களை விமர்சிப்பதாக திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு சமூக வலைத்தளத்தில் ராஜ்கிரண் பதில் அளித்துள்ளார்.
ராஜ்கிரண் கூறியது, கடவுள் இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால் . கடவுள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை. மதங்கள் பல்வேறு இருக்கலாம் ஆனால் அனைவரின் குறிக்கோளும் ஒன்றுதான், அது மனிதனை மேன்மைப் படுத்துவதுதான். அன்பும், மனித நேயமும் மனிதனை மேன்மைப்படுத்தும் என்பதுதான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. அந்த வகையில் இந்து மதம் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சிவபெருமான், விநாயகபெருமான், முருக பெருமான் போன்ற அவதார தெய்வங்களாக வழிபடுவதன் மூலம் மனிதனை மேன்மைப்படுத்தும் போதனைகளை செய்கிறது.
இந்த அவதார தெய்வங்கள் மூலம் சொல்லப்படும் அனைத்து செய்திகளும் வாழ்க்கைத்தத்துவங்கள் தான்.எல்லா மத தத்துவத்தையும் கசடற கற்று தெளியாமல் கடவுள் இல்லை என்று சொல்லிவிடமுடியாது. கற்றுத்தெளிய அரசியல்வாதிகளுக்கு நேரமும் இருக்காது. பகுத்தறிவின் உச்சகட்ட மேம்பாடு அன்பும் மனிதநேயமும் தான் என்று ராஜ்கிரண் கூறினார்.