Categories
அரசியல்

பெற்றோர்களே உஷாரா இருங்க…!! ”புது சிக்கல் வந்து விட்டது”… குழந்தைகளுக்கு எச்சரிக்கை…. !!

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இருந்தும் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் கல்விக்கு ஊக்குவிக்க அனுமதி அளித்துள்ளது ஏற்கனவே  தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை முன்னதாகவே தொடங்கிவிட்டனர்.

இதனிடையே தனியார் பள்ளிகள் அதிக நேரம் கட்டாயப்படுத்தி, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற  விஷயங்களெல்லாம் கல்வியாளர்களிடையே விவாத பொருளாக மாறியது.

இந்த நிலையில் மருத்துவர்கள் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் மொபைல் வழியாக ஆன்லைன் கல்வி படிப்பதால்… குழந்தைகள் நலம் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளனர். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதால், உடல் செயல்பாடு குறைந்து…. உடல் பருமன் அதிகரிக்கும். செல்போன் கதிர்வீச்சால் குழந்தைகள் மூளை வளர்ச்சி பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |