உதகையில் அடிப்படை வசதிகள் இல்லாத போதிலும் பழங்குடியின மக்கள் இயற்கை வேளாண்மையில் அசத்தி வருகின்றனர்.
பச்சை வண்ண போர்வையை போர்த்திய படி இயற்கை அழகுடன் நம்மை வரவேற்கின்றன. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள குறும்பன் பாடி மற்றும் குறும்பர் பாலம் கிராமங்கள். இயற்கை வளத்துடன் ரம்மியமாக காட்சியளிக்கும் கிராமங்களில் வசிக்கும் பெட்ட குறும்பர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர். ராகி, கம்பு, தினை, சாமை உள்ளிட்ட சிறு தானியங்களையே முக்கிய உணவாக எடுத்துக் கொள்கின்றனர். மேலும் இயற்கை முறையில் மண்புழு உரத்தை பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளை உண்பதால்,
உடல் ஆரோக்கியத்துடன் நூறு வயதுவரை வாழ்வதாக கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும் சாலை, மின்சாரம், மருத்துவமனை, பள்ளி, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சிரமத்துற்கும் உள்ளாகி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கையுடன் இணைந்து வாழும் பழங்குடியினர் வனவிலங்குகள் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் இழப்பதை தடுக்க போதிய கழிப்பிடங்கள் கட்டி தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.