காஷ்மீர் மட்டுமல்லாமல், குஜராத்தையும் பாகிஸ்தானோடு இணைத்து பாகிஸ்தான் வரைபடம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் சமீபத்தில் அந்நாட்டின் வரைபடம் என்று ஒன்றை வெளியிட்டார். அதில் இந்திய நாட்டிலுள்ள காஷ்மீர், குஜராத் பகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதுவும் பாகிஸ்தான் பகுதிகள் என அந்த வரைபடத்தில் குறிப்பிடப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை இது குறிப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார். இதை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகிஸ்தான் நாட்டின் அரசியல் வரைபடம் என்று பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள படத்தை நாங்கள் பார்த்தோம். இது அரசியல் அபத்தமான நடவடிக்கை, எங்கள் நாட்டின் குஜராத் மற்றும் காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் உரிமை கூறுவதை ஏற்க முடியாது. சர்வதேச அளவில் இதன் மீது நம்பகத்தன்மையே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.