Categories
அரசியல்

தமிழக்தில் அனைத்து பள்ளிகளுக்கும் – அதிரடி உத்தரவு

தமிழகத்தில் கொரோனா கால பொதுமுடக்கத்தால் வேலை இழந்து, வருவாய் இழந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான காலகட்டங்களில் பள்ளிகளில் முழுமையான கட்டணம் வசூலிக்க கூடாது, கட்டணம் செலுத்துங்கள் என்று  நிர்பந்திக்க கூடாது என உத்தரவிடப்பட்டது. ஆனால் பல்வேறு பள்ளிகள் நீதிமன்றம,  தமிழக அரசு உத்தரவை மீறி வசூலித்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இது தொடர்பான வழக்கில் நேற்று முக்கிய உத்தரவை ஐகோர்ட்டு பிறப்பித்தது. அதில், தமிழகத்தில் பெற்றோர்களை கல்வி கட்டணத்தை செலுத்த நிர்ப்பந்திக்கும் தனியார் பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர்களும் புகார் அளிக்கலாம். நீதிமன்ற உத்தரவை மீறி கட்டண வசூலில் ஈடுபட்ட பள்ளிகள் குறித்த விவரங்களை ஆகஸ்ட் 15 அன்று சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |