இலங்கையில் போதைப்பொருள் கடத்திய பூனையை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இருக்கின்ற சிறை ஒன்றில் புகுந்த பூனையின் கழுத்தில் ஒரு சிறிய பிளாஸ்டிக் பை இருப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். அந்த பிளாஸ்டிக் பைக்குள் 2 கிராம் ஹெராயின், இரண்டு சிம்கார்டுகள் மற்றும் ஒரு மெமரி கார்டு ஆகியவை இருந்திருக்கின்றன. அதனால் அந்தப் பூனை சிறையில் இருக்கின்ற ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று சிறையிலிருந்து பூனை தப்பி விட்டதாக தகவல் வெளியாகியது.
அதன் பின்னர் வெளியான தகவலில், அந்தப் பூனை சிறை வளாகத்திற்கு உள்ளேயே சுதந்திரமாக சுற்றித் திரிந்து வந்தது கண்டறியப்பட்டது.சனிக்கிழமை அன்று கழுத்தில் போதைப்பொருளுடன் பிடிக்கப்பட்ட அந்த பூனை, ஞாயிற்றுக்கிழமை சிறையிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், திங்கட்கிழமை மீண்டும் பிடிக்கப்பட்டுள்ளது.