Categories
தேசிய செய்திகள்

பள்ளிகளில் மாணவர்களுக்கு…. ”மதிய உணவு,காலை சிற்றுண்டி” புதிய கல்வி கொள்கையில் தகவல் …!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதில் பல்வேறு பாதகமான அம்சங்கள் இருக்கின்றது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் மத்திய அரசோ மாணவர்கள் நலன் கருதி, கல்வி தரத்தை உயர்த்துவதற்காக இந்த கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளது.

புதிய கல்வி கொள்கை மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு என்றும், இதில் மாணவர்கள் நலன், உடல் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பள்ளிகளில் ஊட்டச்சத்து குறை உள்ள மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கான சிற்றுண்டி திட்டம் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் உடல் நலனை பாதுகாக்க முன்னுரிமை அளித்து இந்த திட்டம் இருக்கின்றது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு மதிய உணவுடன் கூடிய சத்து மிகுந்த காலை சிற்றுண்டியும் வழங்க புதிய கல்விக் கொள்கையை வலியுறுத்துகிறது. சூடான சிற்றுண்டி வழங்க முடியாத பள்ளிகளில் அல்லது இடங்களில் சர்க்கரை கலந்த வேர்க்கடலை, அல்லது சுண்டல், உள்ளூரில் கிடைக்கும் பழங்கள் ஆகியவை வழங்கலாம் இதன்மூலம் மாணவர்கள் கற்றல் மேம்பாடு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |