Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

28 வயசு இளம் நடிகையுடன்…. 60 வயசு நடிகருக்கு 3ம் திருமணம்…. வைரல் ஆகும் விசித்திர ஜோடி …!!

ஹாலிவுட் பிரபல நடிகர் தன்னைவிட 31 வயது குறைவான நடிகையை திருமணம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சில சினிமா பிரபலங்களின் வாழ்க்கை பல்வேறு திருமணம், விவாகரத்து, லிவ்விங் இன் ரிலேஷன்ஷிப் என அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். இதுபோன்ற செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதும் சாதாரணம். அதோடு ஹாலிவுட் சினிமாவில் இது மிகவும் சகஜமான ஒன்று. தற்போது ஹாலிவுட் சினிமாவின் ஸ்டாரான சீன் பெண் இளம் நடிகை லைலா ஜார்ஜை திருமணம் செய்துள்ளார். இவ்விருவருக்கும் இடையே 31 வயது வித்தியாசம் இருக்கின்றது.

ஆகஸ்ட் 17ஆம் தேதி தனது அறுபதாவது வயதில் அடி எடுத்து வைக்கும் சீன் பெண் மூன்றாவது முறையாக லைலாவை திருமணம் செய்துள்ளார். இத்தாலியில் பிரபல நடிகை சாச்சி மற்றும் தயாரிப்பாளர் வின்சென்ட் ஆகியோரின் மகள் தான் லைலா. சீன் பெண் மடோனா என்ற பெண்ணை முதல் திருமணம் செய்து விவாகரத்தான நிலையில் இரண்டாவதாக ராபின் ரைட் என்ற பெண்ணை திருமணம் செய்து அதுவும் விவாகரத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |