Categories
தேசிய செய்திகள்

“நியாயமற்ற நிகழ்வு” 43 மருத்துவர்கள் மரணம்….. நாட்டிலையே முதலிடம்….. சோகத்தில் தமிழக மக்கள்…!!

நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை விபரம்  தற்போது மாநிலவாரியாக வெளியாகியுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதில், ஒரு புறம் அத்தியாவசிய காரணங்களுக்காக மக்கள் வெளியே செல்லும்போது  காட்டும் சில அலட்சியங்களால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

சிலர் தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சென்று கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் இவர்களில் யாரும் தனக்கு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையுடன் தான் வெளியே சென்று வந்தவர்கள். ஆனால் மருத்துவர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் மக்களை காக்கும் சேவைப் பணியில் ஈடுபடும் போது எப்போது வேண்டுமானாலும் நோய் தொற்று ஏற்படலாம்  என்பதை அறிந்தும் அச்சத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துமுள்ளனர். அந்த வகையில்,

இந்திய நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 23 பேரும், குஜராத் மாநிலத்தில் 20 பேரும், பீகார் மாநிலத்தில் 15 பேரும், டெல்லி, கர்நாடகாவில் தலா 12, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 11 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி தற்போது தமிழக மக்களிடையே மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நம்மை காப்பதற்காக தங்களது உயிரை தியாகம் செய்து மருத்துருவார்கள் அரும்பாடுபட்டு சேவை செய்து வருகிறார்கள். அவர்களது தியாகத்தை மதித்து கொரோனாவை கையாண்டு விரட்ட உறுதியேற்போம். 

Categories

Tech |