Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

உங்களுக்கு கொரோனா….. 16 நோயாளிகள் தப்பியோட்டம்….. பத்திரமா இருங்க…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…..!!

திருவள்ளூர் அருகே 16 கொரோனா நோயாளிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அயராது உழைத்துவரும் அதிகாரிகள் மத்தியில், சிலரின் அலட்சியத்தாலும், பொதுமக்களின் தேவையற்ற செயல்களாலும் கொரோனா பாதிப்பு பரவுவதற்கான வாய்ப்புகள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றன.

அந்த வகையில், திருவள்ளூர் அருகே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 16 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, வழியில் ஆம்புலன்ஸிலிருந்த 16 பேரும் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தப்பி ஓடியவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் அழைத்துவரப்பட்ட பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மருத்துவ நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொறுப்பற்று நடந்து கொண்ட அந்த 16 பேர் மீதும் நோய்த்தொற்று பரப்புதல் உள்ளிட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |