PFAS என்னும் ரசாயன வேதிப்பொருளால் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மனிதன் கண்டுபிடிக்கும் புதிய வேதிப்பொருட்களால் சில நன்மைகள் ஏற்பட்டாலும், அது காலப்போக்கில் மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இயற்கையை சார்ந்து மனிதர்கள் வாழ்ந்து வந்த கட்டத்தில் நோய் நொடி இல்லாமல் அவர்கள் இருந்தனர். தற்போது இயற்கையை மறுத்து வேதிப்பொருள்கள் போன்ற செயற்கையை நம்பிய காலகட்டத்தில் மனிதர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில், PFAS (per and polyfluroalkyl substances ) எனப்படும் ஆபத்தான ரசாயன பதார்த்தம் ஒன்று ஆர்டிக் பகுதியில் அதிகம் பரவியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாம் பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்களில் உள்ள இந்த ரசாயனம், உலகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை மாசுபடுத்தியுள்ள நிலையில், நமது உணவு மற்றும் குடிநீரில் அதிகம் கலந்து உள்ளதாகவும் இதனால் பெரும் ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளனர்.