Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கொரோனா ஆபத்து” ஆகஸ்ட் 18க்குள் காப்பத்தில் சேர்த்திடுங்க….. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சாலையோர மக்களை காப்பகத்தில் சேர்க்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அவரவர் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் வீடு இல்லாதவர்கள் சாலையோரம் திரிபவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

அதிலும் பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்த பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக வழக்கறிஞர் கற்பகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிபவர்களை கண்டறிந்து காப்பகங்களில் அரசு சேர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை 18ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |