மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்வீட் செய்திருந்தார். இது அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்புள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை கண்டு கொள்ளாத குஷ்பூ அமித் ஷாவுக்கு நலம்பெற வாழ்த்திய ஏன் ? அவர் பாஜகவில் இணைய உள்ளாரா என பல விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு கூட குஷ்பூ புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவாக டுவிட் பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவரும் கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்போது மீண்டும் குஷ்பு குறித்தான ஒரு அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது தேசிய அளவில் பேசு பொருளாக உள்ளது.