Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…அனுகுலம் ஏற்படும்…பண நெருக்கடிகள் தீரும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள் ஆக இருக்கும். பண நெருக்கடிகள் தீரும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல்செய்விர்கள். வெற்றி வாய்ப்புக்கள் வீடு தேடி வரும். முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். வயிறு கோளாறு போன்றவை ஏற்படலாம். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

எதிர் பாலினரின் நட்பு இருக்கும். பயணங்கள் மூலம் அனுகுலம் ஏற்படும். நிதி மேலாண்மையில் கவனம் கொள்ளுங்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் எப்போதுமே கவனமாய் இருங்கள். அதே போல மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும்.

மாலை நேரங்களில் நடைப்பயிற்சி எப்போதுமே கடைபிடியுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4

அதிர்ஷ்டநிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |