திருப்பதி கோவிலில் 4 கோடியே 33 லட்சம் ரூபாய் சில்லரையாக வங்கியில் டெபாசிட் செய்யாமல் இருப்பதாக தேவஸ்தான அலுவலர் தெரிவித்துள்ளார்
திருமலையில் தேவஸ்தானம் பரகமணி சேவ குழு திட்ட அதிகாரிகள் மற்றும் அரசு வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அலுவலர் பேசியபோது, “ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பிரதான உண்டியலில் சில்லறை நாணயங்களையும் ரூபாய் நோட்டுகளையும் காணிக்கையாக போட்டு வருகின்றனர். அதில் சில்லரை நாணயங்கள் மட்டும் 4 கோடியே 33 லட்சம் வரை அப்படியே உள்ளது.
உடனடியாக அதனை திருப்பதிக்கு அனுப்பி எண்ணி வங்கியில் டெபாசிட் பண்ணவேண்டும். 2019 ஆம் வருடம் சில்லரை நாணயங்கள் 51 கோடியே 80 லட்சம் வரை சேர்ந்திருந்தது. அவை விரைவாக எண்ணப்பட்டு வங்கியில் முறையாக டெபாசிட் செய்யப்பட்டது. அதேபோன்று இப்போது சேர்ந்திருக்கும் நாணயங்களையும் வெகுவிரைவாக வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.