பொதுமக்கள் தங்க பத்திரம் பெற ஆகஸ்ட் 3 முதல் 7 வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி பத்திரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்த பத்திரத்தின் முதிர்வு காலம் எட்டு ஆண்டுகள் ஆக இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு விரும்பினால் முதலீட்டை திரும்பப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
முதலீட்டைத் திரும்பப் பெறும் நாளில் உள்ள விலையில் முதிர்வு தொகையை பெறலாம் என்று தனது அறிக்கையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது