ஊரடங்கு காலத்தில் இணைய வழியில் கல்வி தொடர்வதால் செல்போன்களின் தேவை அதிகரித்து, அதன் விலை உயர்ந்துள்ளது
முழுமையான இணைய வழி, பகுதியளவு இணைய வழி என ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளிட்டுயிருக்கிறது. தொலைக்காட்சி மூலமும் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டாலும் ஊரடங்கு முடிவுக்கு வரும்வரை படிப்பதற்கு செல்போனை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய சூழல்தான் இருக்கிறது. இதனால் செல்போன்களின் விலை அதிகரித்திருக்கிறது. எப்போதும் இல்லாத அளவு செல்போன் விற்பனையும் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்.
குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் இருந்தால் தான் ஆன்லைன் கல்விக்கு பயன்படுத்தும் வகையிலான செல்போன்களை வாங்க முடியும். இரண்டு பிள்ளைகள் வைத்துள்ள கூலி வேலை செய்யும் பெற்றோர்கள் குழந்தைகளை படிக்க வைக்க பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது. பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக கடனில் செல்போன் வாங்கி தவனை கட்டி வருகின்றனர் நடுத்தரக் குடும்பத்தினர்.
கல்விக்கு செல்போன் கட்டாயமாக இருப்பதால் குறைந்த விலை ஸ்மார்ட் போன்கள் அதிகம் விற்பனையாகின்றன. புதிய செல்போன் வாங்க முடியாதவர்கள் பழைய செல்போன்களை வாங்குவதால் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. செல்போன் பழுதானால் மீண்டும் புதிய போன்கள் வாங்குவார்கள். ஆனால் பொருளாதார இழப்பில் இருப்பதால் செல்போன் பழுது பார்க்கும் கடைகளில் கூட்டம் அதிகரித்து இருக்கிறது. செல்போன்களின் விலை இன்னும் அதிகரிப்பதற்குள் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.