Categories
சினிமா தமிழ் சினிமா

இனி இப்படி பண்ணாதீர்கள்… உங்களுக்கும் காத்திருக்கும்… கண்டனம் தெரிவித்த மிருணாளினி…!!

நடிகை மிருணாளினி கொரோனா நோயாளிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் மிருணாளினி. விக்ரமுடன் தற்போது கோப்ரா, எம். ஜி. ஆர் நகர் மற்றும் கன்னட படங்களில் நடித்துவருகிறார். கொரோனா நோயாளிகளை வீடியோ எடுத்து வெளியிடும் அவமதிப்பை கண்டித்து மிர்னாலினி கூறுவன” உங்கள் வீட்டின் பக்கத்தில் வசிப்பவர்கள் யாருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டு அவரை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது அவரை புகைப்படமோ அல்லது வீடியோவை எடுக்காதீர்கள்.

மாறாக வீட்டின் கதவுக்கு அருகில் அல்லது பால்கனியில் நின்று தொற்று ஏற்பட்டவர்களைப் பார்த்து கட்டை விரலை உயர்த்தி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவீர்கள் என்று வாழ்த்து கூறுங்கள். கொரோனா தொற்று பரவுவதை பார்த்தால் உங்களுக்கும் ஆம்புலன்ஸ் காத்திருக்கிறது என்ற நிலைதான் உள்ளது. ஆகவே நோயாளிகளை மதியுங்கள். அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தாதீர்கள், அவதூறு செய்யாதீர்கள். தொற்று ஏற்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல. குணமடைந்து வீடு திரும்பி விடுவார்கள். அவர்களின் மீது அன்பு செலுத்துவோம். பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் வீட்டிலேயே இருங்கள்” என்று மிருணாளினி கூறியுள்ளார்.

Categories

Tech |