Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாயை அடித்து கொல்லும் வீடியோ வலைதளத்தில் வைரல் ..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நாயை அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சமீபகாலமாக வாயில்லா ஜீவன்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்து வருகின்றது. உணவுப்பொருளில் வெடி மருந்தை வைத்து கொடுப்பது, தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை துன்புறுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் ரயில்வே நிலையம் அருகே உள்ள பகுதியில் சுற்றித்திரிந்த நாயை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சுருக்குப் போட்டு பிடித்தனர்.

பின்னர் உருட்டு கட்டைகளை வைத்து காட்டுமிராண்டித்தனமாக நாயை தாக்கியதோடு இதனை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த தாக்குதலில் நாய்  உயிரிழந்தது. தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |