ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்காக மாணவி ஒருவருக்கு நடிகை டாப்ஸி ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது.
ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன் கேட்ட மாணவி ஒருவருக்கு நடிகை டாப்ஸி போன் வாங்கி கொடுத்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அந்த மாணவியும் அவரின் தந்தையும் மாணவியின் ஆன்லைன் கல்வி வகுப்பிற்காக உதவி செய்யும் வகையில் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கல்லூரித் தேர்வுகளில் ஸ்மார்ட்போன் கேட்ட மாணவி 94 விழுக்காடு மதிப்பெண்களை பெற்று இருக்கிறார். இதனைத்தொடர்ந்து அந்த மாணவி ஸ்மார்ட்போன் கேட்ட கோரிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அதனைப் பார்த்த பலர் அந்த மாணவிக்கு உதவி செய்வதற்கு முன் வந்துள்ளனர்.அது மட்டுமன்றி அவரின் கல்விக்காகவும் அவரது இரு சகோதரிகளின் கல்விக்காகவும் உதவி செய்வதற்கு பலரும் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். இதன்பின்னர் நடிகை டாப்ஸி அவராகவே முன்வந்து அந்த மாணவிக்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டர் பதிவில்,”நமக்கு படிக்க பல பெண்கள் தேவை. நமக்கு ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். நமக்கு பல மருத்துவர்கள் தேவை. நமது தேசத்துக்கு சிறந்த எதிர்காலம் அமைவதற்கு என்னுடைய சிறிய முயற்சி இது” என பதிவிட்டுள்ளார்.
Thank you to @taapsee for this lovely gesture that will bring this young girl’s dreams that much closer! And to all who reached out to this family. What a wonderful reminder that there is kindness and goodness in this world. 🤗 https://t.co/GpTddvkCHt pic.twitter.com/YyOlxywPLG
— Maya Sharma (@MsMayaSharma) July 30, 2020