Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இளம்பெண் மணிமேகலை வழக்கு : காதலனை கைது செய்த போலீஸ்..!!

காதலித்து ஏமாற்றியதால் அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு ஒன்றியம் நல்லாத்தூர் என்ற காலனியில் மணிமேகலை (21) என்பவர் வசித்துவருகிறார். அவர் ராஜ்குமார் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி கொசஸ்தலை ஆற்றில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் காதலித்து ஏமாற்றிய நபர் மீது பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், காவல்துறையினர் அந்தப் பெண்ணை அசிங்கப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியுள்ளனர் என்று புகார் கூறி தலித் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி என்பவர் அந்தப் பெண்ணின் தற்கொலை தொடர்பாக அவரின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளார். மேலும் மணிமேகலையை காதலித்து ஏமாற்றிய ராஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அதே சமயத்தில் அந்தப் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் மீதும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |