Categories
உலக செய்திகள்

400 பேரை விடுவிக்க முடியாது… அதிபர் பேச்சால் ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள்… விரக்தியில் அமெரிக்கா..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் கைதிகள் 400 பேரை சிறையில் இருந்து விடுதலை செய்ய முடியாது என அதிபர் அஷ்ரப் கனி கூறியுள்ள செய்தி தலிபான் பயங்கரவாதிகள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 19 வருடங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்க அரசுக்கும் தலிபான் பயங்கரவாத இயக்கத்தினருக்கும் இடையே சென்ற பிப்ரவரி மாத இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க அனுமதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் தலிபான் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் ஆயிரம் பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக ஆப்கானிஸ்தான் சிறையில் இருக்கின்ற 5,000 தலிபான் கைதிகளை விடுதலை செய்யும் என்றும் உறுதி அளித்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்த விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒப்பந்தத்தின்படி கைதிகளை பல குழுக்களாகப் பிரித்து விடுதலை செய்துள்ளனர். பின்னர் தாங்கள் அளித்த வாக்கின்படி ஆயிரம் பிணைக்கைதிகளை விடுதலை செய்து விட்டதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு நேற்று முன்தினம் கூறியுள்ளது. அதே சமயத்தில் சிறையில் மீதம் இருக்கின்ற தலிபான் தலிபான் கைதிகளை விடுதலை செய்வது பற்றி அதிபர் அஷ்ரப் கனி அரசுடன் ஒரு வாரத்திற்குள் பேச இருப்பதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு கூறியிருக்கிறது.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி மக்களிடம் உரையாற்றிய அதிபர் அஷ்ரப் கனி, கொலை உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களின் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்ற 400 தலிபான் கைதிகளை சிறையில் இருந்து எவ்வித காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாது எனவும், அந்த கைதிகளை மன்னிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை எனவும் கூறியுள்ளார். தலிபான் பயங்கரவாதிகள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் மோதலை நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அதிபர் அஷ்ரப் கனியின் பேச்சு அவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அதுமட்டுமன்றி ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அமெரிக்காவிற்கு இது ஒரு பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |