Categories
Uncategorized

“இந்திரன்-இந்திராணி” ரக்ஷபந்தன் யாருக்கான திருவிழா….. ரகசிய உண்மை….!!

ரக்ஷாபந்தனுக்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கிறது அதில் ஒரு கதை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

வட மாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ரக்ஷாபந்தனும் ஒன்று. ரக்ஷபந்தன் என்று சொல்லும்போதே அது அக்கா, தம்பி அண்ணன், தங்கை உள்ளிட்ட உறவுகளுக்கான திருவிழா என்றுதான் பார்க்கிறோம். ஆனால் புராணகால கதைகளுக்கு சென்று பார்த்தோமேயானால், இந்த ரக்ஷாபந்தன் என்பது அண்ணன் தங்கைகளுக்கான விழா கிடையாது. கணவன், மனைவிக்கான திருவிழா என்று கூறப்படுகிறது. அந்த கதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

ஒரு முறை இந்திரலோகத்தில் இந்திரனுடைய மனைவியான இந்திராணி இந்திரனுக்கு ஒரு கயிறு ஒன்றைக் கையில் கட்டி அனுப்பி விடுகிறார். அதுதான் ராக்கி. இது எதற்காக என்றால், போரில் அசுரர்களை எதிர்த்துப் போராடும் இந்திரனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக கட்டப்பட்டதுதான் அது. இந்திரனை தொடர்ந்து தேவலோகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தேவர்களும் இதனை கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அன்பை பரிமாறிக் கொள்வதற்காக தனக்கு பிடித்தவர்களுக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக இந்த விழாவானது கொண்டாடப்பட்டது.

ஆனால் நாளடைவில் இந்த விழா மாறி மாறி கொண்டாடப்பட்டு அண்ணன் தங்கை உறவுகளுக்கான விழாவாக மாறிவிட்டது. கணவன் மனைவி பந்தம் முக்கியம் தான். அதைவிட உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் உறவு அதைவிட முக்கியமானது. இந்த விழாவிற்கு இதே போன்று பல கதைகள் உண்டு. எத்தனை கதைகள் சொல்லப்பட்டாலும் ராக்கி கட்டி ரக்ஷாபந்தன் கொண்டாடுவது என்பது அன்பை பரிமாறுவதற்காக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதில் மாற்றம் இல்லை.

Categories

Tech |