Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரே வருடத்தில்… புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை… இதுதான் காரணமா?

சென்னையில் திருமணமாகி ஒரே வருடத்தில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகணேஷ் (29), மற்றும் பிரியதர்ஷினி (29) ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சென்னை அம்பத்தூரில் இருக்கின்ற தனியார் வங்கியில் ஹரிகணேஷ் மேலாளராக பணியாற்றி கொண்டிருக்கிறார். நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரியதர்ஷினி பணியாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.கே.நகர் காவல் துறையினர் இறந்தவர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி காவல் துறையினர் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காரணத்தால் பிரியதர்ஷினி வீட்டில் இருந்து பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரியதர்ஷினி பணிபுரிந்து கொண்டிருக்கும் போது கணவர் ஹரி கணேஷிடம் வேலை சம்பந்தமாக உதவி கேட்டுள்ளார். ஹரிகணேஷ் உதவி செய்வதற்கு மறுத்ததால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் கோபமடைந்த பிரியதர்ஷினி தனியறைக்கு உறங்குவதற்கு சென்றுள்ளார்.

 

பின்னர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் பிரியதர்ஷினி அறையிலிருந்து வெளிவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹரிகணேஷ் கதவை உடைத்து பார்த்தபோது, பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து என்பது தெரியவந்துள்ளது” என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதே சமயத்தில் பிரியதர்ஷினி பணிச்சுமை காரணமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததால் சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அந்தப் பெண் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரே வருடத்தில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |