கோடநாடு விவகாரத்தில் முதல்வரும் , ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கோடநாட்டில் நடைபெற்ற கொலை , கொள்ளை வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக திமுக தலைவர் முக. ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையை தொடர்ந்த நீதிமன்றம் ஸ்டாலின் மீதான விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் அவதூறாக பேசி வருவதாகவும் , அதை உடனே நிறுத்தாவிட்டால் அவர் மீது மீதான அவதூறு வழக்கு தடையை நீக்கி வழக்கை சந்திக்க வேண்டியிருக்கு என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து முதல்வர் எடப்பாடியும் இதுகுறித்து பேசியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் தொடங்கியது. அப்போது, முக. ஸ்டாலின் முதல்வர் குறித்து பேசிய வீடியோ ஆதாரங்களை முதல்வர் தரப்பு வழக்கறிஞ்சர் நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதேபோல் ஸ்டாலின் குறித்து முதல்வர் பேசிய விடியோவையும் நீதிபதி முன் எடுத்துரைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட பின்பு நீதிபதி இளந்திரையன், கோடநாடு விவகாரம் பற்றி தமிழக முதலமைச்சரும் , திமுக தலைவர் ஸ்டாலினும் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுத்தி இந்த வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.