திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டது அண்மைக்காலமாக தலைவர்கள் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவதால், இந்த சிலைகளுக்கு பாதுகாப்பு கூண்டு அமைக்க முடிவு செய்த அதிமுக நிர்வாகிகள், சிலையை பார்வையிட்டு அளவீடு செய்ய சென்றன. அப்போது பெரியார் சிலை முகம் கண்ணாடி ஆகியவை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு இருப்பது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சிலை சேதப்படுத்தப்பட்டதை சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு மீஞ்சூர் திமுக நகர செயலாளர் மோகன்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் மேலும் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.