துப்பாக்கி குண்டு மண்டையோட்டை துளைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை மருத்துவர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் காப்பாற்றியுள்ளனர்
டெல்லி சோனியாவை விஹார் பகுதியை சேர்ந்த ராதே ஷ்யாம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அச்சமயம் திடீரென மர்ம நபர் ஒருவர் ஷ்யாமை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் குண்டுகள் ஷ்யாமின் தலையில் பாய சுயநினைவை இழந்த அவர் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 4ம் தேதி திகதி சிர் கங்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்தபோது அவரது தலையின் மண்டையோட்டில் உள்ளே வெளியே என பல இடங்களை துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
அதோடு ஹெமிஸ்பெயர் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி அவரது எலும்பு மடலை அகற்றிய போது தலையில் துப்பாக்கி குண்டு சிதறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூளையின் இடது பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்ததால் அதில் வீக்கம் ஏற்பட்டு ரத்தக் கட்டிகள் ஏற்பட்டிருந்தன. மிகவும் ஆபத்து நிறைந்த இத்தகைய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த சமயத்தில் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழல் அனைத்தையும் தாண்டி திகதி சிர் கங்கா மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அதன்பின்னர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த ஷ்யாம் தற்போது குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளார்.