Categories
மாநில செய்திகள்

ஆகஸ்ட் 3 முதல்….. தமிழகம் முழுவதும்….. அமைச்சர் அறிவிப்பு….!!

ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒருபுறம் நடைபெற்று வர, மறுபுறம் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும். வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி முதல் இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கான பணிகளை அரசு ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அட்டவணையை அரசு விரைவில் வெளியிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |