Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…கவலை நீங்கும்…ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்று உங்களுடைய தன்னம்பிக்கை தைரியம் எல்லாம் ஓங்கி நிற்கும். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் இருக்கும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். பெண்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வீர்கள். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்வீர்கள். குழப்பத்தின் காரணமாக சில முடிவுகள் தவறாக அமைந்துவிடலாம். அதனால் அந்த விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது ரொம்ப நல்லது.

எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மையை கொடுக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். தனிப்பட்ட பணவரவு தடை நீங்கி கையில் வந்து சேரும். குழந்தைகள் பற்றிய கவலை நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்துவந்த பிரச்சனைகளும் சரியாகும். இன்று மனம்  திடமாக காணப்படும். தன்னம்பிக்கை அதிகமாக துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதேபோல நண்பர்களால் சில விஷயங்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாள வேண்டும்.

அதாவது நண்பரை நீங்கள் குறை சொல்லாமல் இருக்க வேண்டும். உறவினரையும் அதேபோல் குறை சொல்லாமல் நடந்துகொள்ளவேண்டும். காதலர்களுக்கு இடையே நாள் சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 4  மற்றும் 7

அதிஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |