Categories
அரசியல்

எட்டு வழி சாலைக்கெதிரான தீர்ப்பு!!.. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுமா பாமக?. ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை to சேலம் எட்டுவழிச்சாலை வழக்கில் வெளியான  தீர்ப்பை எதிர்த்து முதலவர் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்யக்கூடாது  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசா‌மிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை முதல் சேலம் வரை தமிழகஅரசு எட்டுவழிசாலை போடுவதற்கு எதிராக பொதுமக்கள் விவசாயிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது இதனையடுத்து எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ,வெளியிடப்பட்ட இந்த உத்தரவை கற்பொழுது ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டு பேசியுள்ளார் . இந்தத் திட்டத்தால், சேலம், தருமபுரி, காஞ்சிபுரம்,‌வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டத்தில் வசிக்கும்  விவசாயிகள்‌ கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் கைது செய்‌யப்பட்டதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


இந்த பிரச்சனையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் ஆகையால் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கும் விதமாக பேச வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும் ஆனால் அதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மறுத்ததாகவும் அவர் கூறியிருந்தார் மேலும் இந்த வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்த அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டணிக்கு பின்பே இந்த பற்றி பேசாதது எனக்கு வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார் தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் ஆனதே இந்த வழக்கிற்கு கொடுத்த தீர்ப்பானது ஐந்து மாவட்டங்களின் விவசாயிகளின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றிய ஒரு தீர்ப்பாகும் மக்களின் உணர்வுகளை போராட்டங்களை மதிக்காத எடப்பாடி அவர்களின் தமிழக அரசுக்கு இன்று தீர்ப்பு தக்க பதிலடியாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்


மேலும் இந்த நல்ல திட்டத்தை எதிர்த்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார் அவ்வாறு மேல்முறையீடு செய்ய மாட்டேன் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்

அவ்வாறு அறிவிக்காவிட்டால்  8 வழி சாலை க்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பாமக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுமாறு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

Categories

Tech |