தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பல்வேறு தளர்வுகள் கொடுத்ததும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு.ஆகஸ்ட் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர எஞ்சிய இடங்களில் 75% பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம்.
வணிக வளாகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும். காய்கறிக்கடைகள், மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி. பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம். மாவட்டத்திலிருந்து மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை தொடரும். வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் கட்டாயம்.