Categories
சற்றுமுன் தென்காசி மாநில செய்திகள்

விவசாயி மரணம் தொடர்பாக – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தை சேர்ந்த பாலம்மாள் என்பவர் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் அணைக்கரை முத்து வாகைக்குளம் பகுதியில் விவசாயம் செய்து வந்த நிலையில் ஜூலை 22ம் தேதி இரவு அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறி வனத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மகன் நடராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் விசாரணை மேற்கொண்டதில் 18 இடங்களில் வெளிப்புற காயங்கள் இருந்ததாக கூறி அவரது குடும்பத்தாரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி இரவே அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மறு உடல்கூராய்வு செய்யவேண்டும், தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சீலிட்ட கவரில் அணைக்கரை முத்துவின் உடற்கூராய்வு  அறிக்கையை நீதிபதியிடம் வழங்கப்பட்டது. அதில், அணைக்கரை முத்துவின் உடலில் நான்கு இடங்களில் காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிட்ட நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன் உயிரிழந்த விவசாயி உடலை மறு பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் தடய அறிவியல் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒருவர் அடங்கிய குழு இந்த உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Categories

Tech |