செங்கல்பட்டு மாவட்டம் மன்ணி வாக்கத்தில் மருந்துக் கடைக்காரரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு ரவுடி ஒருவன் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்தவர் வினோத் இவர் அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார் நேற்று காலை வினோத் மருந்து கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் ரவுடி சிலம்பரசன் பேசுகிறேன் என்றும் தனக்கு 50,000 மாமூல் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து ஓட்டேரி போலீசில் வினோத் புகார் அளித்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் மருந்து கடை உரிமையாளரிடம் ரவுடி சிலம்பரசன் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோயுடன் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார், எஸ்பி கண்ணனிடம் புகார் அளித்தார் மேலும் அவர் மிரட்டிய ஆடியோ பதிவையும் கொடுத்தார்.