கடந்த 5 மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா கால முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் பல பகுதிகளில் போக்குவரத்து சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவரின் நடவடிக்கையும் முடக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியருக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா ஊரடங்கு காலத்தில் மார்ச் 25ம் தேதிக்கு பிறகு போக்குவரத்து இன்று பணிக்கு செல்ல முடியாத ஊழியர்கள் தங்கள் நிலைமை குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதனால் வருகைப்பதிவேடு உள்ளிட்ட பிரச்சினை ஏதும் வராது என தெரிவித்துள்ளது.