15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் வசித்து வரும் முகம் ஒன்று அமைந்துள்ளது. முகாமை சேர்ந்தவர் நாகராஜ். பெயிண்டராக பணிபுரிந்து வரும் நாகராஜ், பவானிசாகர் அடுத்த எரங்காட்டூர் பகுதிக்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். அச்சமயம் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு நாகராஜ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் தாய் பவானிசாகர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் நாகராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாகராஜ் கிளை சிறையில் தண்டனைக்காக அடைக்கப்பட்டார்.