Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… தேவைகள் பூர்த்தியாகும்… இது இருந்தால் இன்றைய நாள் சிறப்பு…!!

துலாம் ராசி அன்பர்கள்…!! பிறருக்கு உதவுகின்ற மனப்பாங்குடன் தான் இன்று செயல்படுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வியாபாரம் வளம் பெறும். குடும்பத்தில் முக்கிய தேவைகள் பூர்த்தி ஆகும். வழக்கு விவகாரங்களில் நல்ல அனுகூலத் தீர்வு கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் சந்தோஷம் ஏற்படும்.

இன்று விருந்தினர் வருகை இருக்கும். செலவை  கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். சிக்கனம் இருந்தால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். அது மட்டுமன்றி உடல் ஆரோக்கியத்திலும் கவனம் அவசியம். மாலை நேரங்களில் நடைப்பயிற்சியை  எப்போதும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிக்க நாளாக  இருக்கும்.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை தெற்கு

அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள்

 

 

 

 

Categories

Tech |