Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மாலை 5 மணிக்கு – முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நாளை மறுநாளோடு  ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் 3.30 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் மாவட்டங்களில் தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது ?  மேற்கொள்ள வேண்டிய சுகாதார பணிகள் என்ன ? என்பது குறித்த விஷயங்களைக் கேட்டறிந்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டிய பல்வேறு ஆலோசனைகளையும் தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியருக்கு.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம்அறிவுறுத்தினார் , துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். நாளை தமிழக முதலமைச்சர் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசிக்க இருக்கின்றார்.  தற்போது இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி உரை ஆற்ற இருக்கின்றார். இதில் கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்தும், கடைகள், அலுவலகங்கள், கட்டுப்பாடுகள் குறித்தும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |