Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி – ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு – ஏமாந்த தனியார் கல்வி நிலையங்கள் …!!

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்றம் 3 பெண்கள் நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

தனியார்  கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் தொழிலாளர்கள் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம் பொருந்தும் என்று தமிழக அரசு கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு ஒரு உத்தரவு பிறப்பித்து,  அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவன சங்கம், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்து, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீடு எனப்படும் ESI  என சொல்லப்படும் சட்டம் இஎஸ் ஐ சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் செல்லும் என்ற தமிழக அரசின் 2010ம் ஆண்டு அறிவிப்பாணைக்கு அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி ஆஷா ஆகிய 3 பெண் நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

Categories

Tech |