Categories
மாவட்ட செய்திகள்

பயன் இல்லா பணி மக்கள் பணம் வீண் சிறப்பு நிதி ஸ்வாஹா….!!!

ராமேஸ்வரம் நகராட்சியில் நடைபெறும் தரமற்ற ஒப்பந்த பணியால் மக்களின் பணம் வீண்போவதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொங்கல் பானையில் போலி பணத்தை வைத்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம் சுற்றுலா தலமாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு நிதி என பல கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகின்றது. ஆனால் அந்த நிதியைகளை  வைத்து நகராட்சி நிர்வாக முறையான பணிகள் எதுவும் செய்யாமல் தரமற்ற பணிகளை ஒப்பந்ததாரர்கள் மூலமாக செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக மக்களின் பணத்தை பொங்கல் வைப்பதாக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

Categories

Tech |