அரியலூர் அருகே வயல்வெளிகளுக்கு வழிதவறி வந்த நட்சத்திர ஆமை விவசாயி பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
நட்சத்திர ஆமை பிடித்த ஜோதிவேல் அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். விளாங்குடியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். ஜோதிவேல் அவரது நிலத்திற்கு விவசாய சென்றுள்ளார். அப்போது கரும்பு வயலுக்கு செல்லக்கூடிய வாய்க்காலில் விசித்திரமாக ஒரு உயிரினம் ஊர்ந்து போவதை பார்த்த ஜோதிவேல் அருகில் இருந்த குச்சியை எடுத்துத் தூக்கிப் பார்த்தபோது அது நட்சத்திர ஆமை என தெரியவந்தது. சுமார் 300 கிராம் எடை உள்ள நட்சத்திர ஆமைகளை தனது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட கிராம மக்கள் நட்சத்திர ஆமை அதிசயமாக பார்த்து சென்றனர். கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் நட்சத்திர ஆமைகள் வனத்துறையினர் வந்து மீட்டனர்.