Categories
தேசிய செய்திகள்

இளம்பெண் கன்னத்தில் அறைந்த போலீஸ்…. பார்த்த மறுகணம் ட்விட்டரில் முதல்வர் உத்தரவு….. அதிகாரி சஸ்பெண்ட்….!!

ஜார்கண்டில் இளம்பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜார்கண்டில் காவல் நிலையம் முன்பு இளம்பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் தலை முடியைப் பிடித்து இழுத்து அவரது கன்னத்தில் பயங்கரமாக அறையும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்த காட்சிகளை படம் பிடித்து அதனை ட்விட்டரில் வெளியிட்டவர் அம்மாநிலத்தின் பிரபல இயக்குனர் அவினாஷ் என்பவர்தான். இந்த பதிவை பார்த்துவிட்டு அம்மாநில முதல்வர் ஹேமந்த் அதனை ரீட்வீட் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின் இதற்கு பதிலளித்த அம்மாநில டிஜிபி சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க புதியதாக டிஎஸ்பி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் தனது காதல் திருமணம் விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்ததாகவும், புகார் அளிக்க வந்த இடத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |