Categories
மாநில செய்திகள்

பாஜகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : சென்னையில் கே.எஸ் அழகிரி கைது….!!

பாஜகவுக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதன் தலைவர் கே.எஸ் அழகிரி கைது செய்யப்பட்டர்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக முயல்வதாக அக்கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் பாஜகாவை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கிண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயாகுமார், வசந்தகுமார், விஷ்ணுபிரசாத் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் கே.எஸ் அழகிரி உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.

Categories

Tech |