Categories
தேசிய செய்திகள்

“கொரோனா தகவல்” மத்திய அரசு திடீர் மாற்றம்….. பொதுமக்கள் அச்சம்…!!

கொரோனா குறித்த தகவல் வெளியிடுவதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை. நாள்தோறும் இந்தியாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு என்ன? ஒரே நாளில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது? எத்தனை பேர் குணம் அடைந்து உள்ளார்கள் ? என்பது உள்ளிட்ட தகவல்களை நாள்தோறும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை மத்திய அரசு வெளிப்படையாக தற்போது அறிவிக்கவில்லை. நேற்று வரை மொத்த மதிப்பு தகவலை வெளியிட்டு வந்த சுகாதார அமைச்சகத்தின் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட கொரோனா குறித்த தகவல்களில் இதேபோன்ற மாற்றம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுகாதார அமைச்சகம் கொரோனா குறித்த அறிவிப்பில் மாற்றம் செய்துள்ளது. இது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனாவை பொறுத்தவரையில் வெளிப்படைத்தன்மை தேவை என்று மத்திய அரசிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Categories

Tech |