Categories
தேசிய செய்திகள்

800 கிலோ மீட்டர் நடைபயணம்… ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு வந்தடைந்த இஸ்லாமியர்….!!

அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோவிலின் பூமி பூஜைக்கு இஸ்லாமியர் ஒருவர் 800 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார்

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் சந்த்குரி என்ற கிராமம் ராமரின் தாயான கௌசல்யா பிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த முகமது பயாகான் என்ற இஸ்லாமியர் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்கும் நோக்கத்துடன் சுமார் 800 கிலோமீட்டர் அவரது கிராமத்தில் இருந்து நடந்தே அயோத்தி வந்தடைந்துள்ளார். இந்நிகழ்வை விமர்சிக்கும் மக்களை பற்றி பேசிய பயாஸ்கான்,” பாகிஸ்தானில் சிலர் இந்து மற்றும் இஸ்லாமிய பெயர்களில் போலி அடையாள அட்டைகளை உருவாக்கியுள்ளனர். அனைத்து சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் இந்தியாவில் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். என்பதை காட்ட துஷ்பிரயோகம் செய்கிறார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேசம் அனுப்பூரை  வந்தடைந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர்: “என் பெயராலும் மதத்தாலும் நான் ஒரு இஸ்லாமியராக இருக்கலாம் ஆனால் நான் ராம பக்தன். தேடிப்பார்த்தால் என்னுடைய மூதாதையர்கள் எல்லோரும் இந்துக்களாக இருப்பார்கள். அவர்களது பெயர்கள் ராம்லால் அல்லது ஸ்யாம்லால் என இருக்கும். மசூதி அல்லது தேவாலயம் எனஎங்கு சென்றாலும் நாம் எல்லோரும் இந்துக்கள் தான் என்று கூறியுள்ளார். மேலும் நான் கோவில்களுக்கு நடந்து வருவது இது முதல் முறை அல்ல. 15 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து இருக்கிறேன் கோயில்கள் மற்றும் மடங்களில் தங்கி உள்ளேன். எனக்கு எதிராக ஒரு வார்த்தை கூட எவரும் பேசியதில்லை. இந்தப் பயணம் வெறும் 800 கிலோ மீட்டர்” என எதார்த்தமாக பேசியுள்ளார்.

Categories

Tech |